Thursday, March 11, 2010

கந்து வட்டி கொடுமைக்கு காவு கொடுத்தோம் தோழரை ....


தோழர் வேலுசாமி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹர்ரம் பகுதியில் மக்களால் நன்கு அறியப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதோழர், என் நேரமும் துருதுருவென சுற்றிக்கொண்டே இருக்கும் ஓர் சமூக அக்கறையுள்ள, உண்மை தொண்டன். காணும் போதெல்லாம் எம்மிடம் எதாவது ஒரு பொது பிரச்சனை சம்மந்தமாக வழக்கு போடலாமா ? தோழர் என கேட்பார். பல குடும்ப பிரச்சனைகளை பேசித் தீர்த்து வைத்துள்ளார். எண்ணிலடங்கா பென்ஷன் தொகை வாங்கி கொடுத்துள்ளார். எப்பொழுதும் மக்களோடு கலந்து பணியாற்றக்கூடிய ஓர் மக்கள் ஊழியன் .
10.03.2010 அன்று இரவு சரியாக 12 மணிக்கு எனது கைபேசி ஒலிக்க ஏதோ வழக்குகாக அல்லது ஆலோசனைக்காக அழைக்கிறார்கள் என்ற எண்ணத்தில் ( எடுக்குலாமா? வேண்டாமா ?) என்ற இரு மனதுடன்தான் கைபேசியை அழுத்தினேன் . மறுமுனையில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் தோழர்.எஸ்.தனபால். என்ன தோழா ? இந்நேரத்திற்கு என்றேன் ?. நம்ம அக்ரஹர்ரம் வேலுவை கொலை செய்து விட்டார்கள் பாவிகள் என்றார். தூக்கம் தெறிக்க எழுந்து உட்கார்ந்தேன். என்ன ஆனது ? யார்? என்றேன். அந்த கந்து வட்டி கொடுமைக்காரர்கள் , பல முறை எச்சரித்திருக்கிறார்கள் தோழா ? இவன் இரவு 10 மணிக்கு மேல் தனியாக டிவி எஸ் -ல் செல்லும் போது வெட்டியே!!! கொன்னுட்டாங்க' என நா தழுதழுத்தது. தூக்கம் கலைந்து, அவரது முகமே முன்னால் நிழலாடியது .
சமிபத்தில் , ஒரு கணவர் மனைவிக்கு இடையே பிரச்சனை என என்னிடம் வந்தார். குழந்தையை கணவர் எடுத்து சென்று விட்டதாக கூறினார். பெண்ணிடம் பேசி திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். பிறகு பேசி முடித்து குழந்தையை பெண்ணிடம் வாங்கி கொடுத்து 1 மணி நேரத்தில் பிரச்சனையை முடித்தோம். பிறகு 3 நாட்கள் கழித்து எமக்கு கை பேசியில் அழைத்தார். தோழரே, குழந்தையை பிரிந்து கணவனால் இருக்க முடியவில்லை. எனவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள். நன்றி தோழரே! என்றார்.
இதுபோல் கடந்த பல ஆண்டுகளில் பல பிரச்சனைகளுக்காக வந்துள்ளார். மாநாடுகளிலும், ஊர்வலங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் எதாவது ஒரு பொது பிரச்சனையை பேசுவார்.
அப்படிப்பட்ட தோழரை இழந்து விட்டோம் !
தோழருக்கு செவ்வணக்கம் செய்கின்றோம். ..

2 comments:

  1. comrade, we've not lost him. He is with us as a sign of inspiration in the struggle against the social evils. In this context this song I think this song will be relevant:

    viduthalai poril viizhntha malare thozhaa, thozhaa!
    veerar umakke vanakkam, vanakkam, thozhaa, thozhaa!....

    ReplyDelete
  2. அன்புள்ள சேகரன்..
    கொடுமைக்காரர்களால் இந்த பூமியில் விதக்கப்பட்டுள்ள தோழன் வேலுவை பற்றி உங்கள் பதிவு மனதை கனக்கவைக்கிறது. ஆயிரம் இடர்பாடுகள் வரினும் நமது பயணம் தொடரும். வீரவணக்கம் தோழர் வேலுசாமி

    ReplyDelete