Monday, March 29, 2010

'' எங்க அம்மாவின் சுருக்கு பையில் காசு திருடிய பன்னாட்டு கம்பெனி ''

கிராமத்தில் இருக்கும் எமது அம்மா சுருக்கு பையில்தான் காசு வைத்திருப்பது வழக்கம் . சிறு வயதில் எமக்கு பள்ளிக்குச் செல்ல காசு எடுத்து கொடுப்பதும், கல்லூரிக்கு செல்லும் போதும்பசும்பால், எருமைப்பால் கறந்து பால் சொசைட்டுக்கு ஊற்றிவிட்டு, அதிலிருந்து வரும் பணத்தையும் சுருக்கு பையில் இருந்து தான் கொடுப்பார்கள்.
அறிவியல் வளர்ச்சியும், தொலைதொடர்பு சாதனமும் பேருந்து வசதி கூட இல்லாத எமது கிராமத்தை அடைந்த சந்தோஷத்தில் எமது அம்மாவோடு நினைத்த நேரத்தில் தொடர்பு கொண்டு பேச கைபேசி ஒன்றை வாங்கி கொடுத்தேன்.கறவை மாட்டு பால் விற்ற காசு சுருக்கு பையில் இருக்க, ரீ-சார்ஜ் செய்ய அருகிலேருக்கும் சங்ககிரி டவுனுக்கு வந்து செய்வது எமது அம்மாவின் வழக்கம். பன்னாட்டு கம்பனின் சிம் கார்டு கடந்த பத்து நாட்களுக்கு முன் நூறு ரூபாய்க்கு ரீ -சார்ஜ் செய்துள்ளார்கள்.
தினமும் ஐந்து , பத்து என பேசாமலேயே குறைவதாக என்னிடம் தொடர்பு கொண்டு சொன்னார்கள். நானும் வேறு வேலைக்காக கிராமத்திற்கு சென்ற பொது , கைபேசியை வாங்கி பார்த்தல் நூறு மெசேஜ் இருந்தது . அனைத்தும் இப்ல் கிரிக்கெட் சம்மந்தமானது.
எமது அம்மாவுக்கோ , கிரிக்கெட்டும் தெரியாது . மெசேஜ்-ஐ எப்படி கொண்டுவருவது என்பதோ ! எப்படி பார்ப்பது என்பதோ கூட தெரியாது. இந்நிலையில் எவ்வித அனுமதியும் இன்றி எமது அம்மாவின் செல்போனில் இருந்து காசு எப்படி போனது?.
இதை கேள்விப்பட்டு எமது மாமியார் அவர்களுக்கும் இதோ போல் குறைந்துவிட்டதாக கூறினார். எமது அக்கா ஒருவரும் இதேபோல் குறைவதாக கூறியுள்ளார்கள்.
எமது குடும்பத்தில் எமக்கு தெரிய முன்னூறு ரூபாய் திருடிய பன்னாட்டு கம்பெனி இது போல் எத்தனை ரூபாய் யார்?யார்?
எங்கெல்லாம் , எத்ததனை கோடிகள் நினைத்து பார்க்க முடியாத திருட்டை தடுத்து நிறுத்துவது யார்? எப்படி? எப்போது?.

1 comment:

  1. நண்பருக்கு வணக்கம்

    பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் அதிக லாபம் யாருக்கு நாட்டிற்கா? அல்லது அந்த நிறுவனங்களுக்கா?
    இன்று மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முதல் அரசின் மாபெரும் திட்டங்கள் வரை வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை மறுப்பதற்கில்லை.
    வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் நாட்டின் முதலீட்டு அதிக அளவிலான முன்னெடுத்தல்,
    புதிய புதிய தொழில்நுட்ப மாற்றங்கள்,
    தொழில்நுட்ப இடைவெளியை குறைப்பது,
    இயற்கை வளங்களை உண்மையான பொருளில் பயன்படுத்தப்படுகின்றன,
    அந்நிய செலாவணி இடைவெளி குறைகிறது,
    அடிப்படை பொருளாதார கட்டமைப்பு திட்டமிடப்படுகின்றன,
    வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது,
    சேவைகுறைபாடு அகற்றுதல்,
    தரமான பொருட்கள் விநியோகம்,
    வசதி வாய்ப்பு அதிகரிக்கிறது போன்ற பலவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படுத்த உதவுகின்றன என பார்க்கப்படுகிறது…
    இது ஒருபுறமென்றால்
    வெளிநாட்டு நிறுவனங்கள் மாசு ஏற்படுத்திகிறது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது,
    சில பன்னாட்டு நிறுவனங்கள் வரி சலுகைக்காக மட்டுமே இங்கு வருகின்றனர்,
    நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டுகின்றனர், வேலை வாய்ப்புகள் குறைவாகவும் நிலையில்லாமலும் சூழலை ஏற்படுத்தும், இலாபம் மட்டுமே நோக்கம்,
    உலக அளவில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் எனவும் பார்க்கப்படுகிறது. இவையில் எது அதிகம் ?
    இதையொட்டி விவாதம் நடைபெற உள்ளது நண்பர்கள் 8754047462 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முழு விபரம் அறிய வேண்டும்

    கார்த்திக்
    புதிய தலைமுறை

    ReplyDelete