Wednesday, August 11, 2010

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படிஇந்தியாவை காப்பாத்துவேன்


ஏன் இந்தியா பிரச்சனையிலேஇருக்கு.

மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வுபெற்றவர்கள்
Visit XciteFun.net
30 கோடி மாநில அரசுபணியாளர்கள்
17 கோடி மத்திய அரசுபணியாளர்கள்
(இருவருமே வேலைசெய்யறதில்லை)
Visit XciteFun.net


1 கோடி IT ஆளுங்க(அவங்க என்னிக்குஇந்தியாக்கு உழைசாங்க)
Visit XciteFun.net


25 கோடி பள்ளிலபடிப்பவர்கள்
Visit XciteFun.net


1 கோடி 5வயசுக்கும்கீழானவர்கள்
Visit XciteFun.net


15 கோடி வேலைதேடுவோர்
Visit XciteFun.net


1.2 கோடி சீக்கு புடிச்சிஆஸ்பிடலில் இருப்போர்
Visit XciteFun.net



ஒரு புள்ளிவிபரத்தின் படி79,99,998பேர் ஜெயிலி

மிச்சம் இருப்பது நீயும் நானும்


நீ எப்போ பார்த்தாலும் மெயில்அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

Visit XciteFun.net


அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படிஇந்தியாவை காப்பாத்துவேன்

Visit XciteFun.net



?ui=2&view=att&th=1256889301c88c70&attid=0.1&disp=attd&realattid=ii_1256889301c88c70&zw


--
--
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே.

நன்றி : ஓர்குட்

Thursday, July 15, 2010

கோவிந்தா....

தோழர் என்பதற்கு தகுதி இல்லாமல் போன
''கோமாளி'' சாமியே
நம்பிக்கை துரோகம்

வசூலுக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்-என
வாய் கூசாமல் பொய் சொன்னீர் ..
வேட்பாளர் ஆக்கியதும் ,
சட்டமன்ற குழு தலைமை பொறுப்பு கொடுத்தும்,
நம்பிக்கையில் தானே நண்பா..

தோழர்கள் இரத்தம் சிந்தி ,
கொடுத்த பதவி, அதை நீ,
முதலாளித்துவத்தின் முதுகில் ஏறவும்,
வாங்கி கொடுக்கும் , வஞ்சக செயலுக்கு
பயன்படுத்திவிட்டாயே ...

நினைவில்லையோ உமக்கு ?
கௌரியும், சோம்-நாத்தும்
தொடரும் பட்டியலில் ...
இவர்களை விடவா ? நீ?
எங்கு இருக்கிறார்கள் ? இருக்கிறார்களா ?


முதலாளி வர்க்கம் உன்னை முதன்மைபடுத்தும்
இன்னும் மூன்று மாதங்களுக்கு மட்டும்.
அதன்பின் , ''கோவிந்தா'' சாமியே !
சரித்திரம் சொல்லும் உம்மை சதிகாரன் என்று....

Monday, March 29, 2010

'' எங்க அம்மாவின் சுருக்கு பையில் காசு திருடிய பன்னாட்டு கம்பெனி ''

கிராமத்தில் இருக்கும் எமது அம்மா சுருக்கு பையில்தான் காசு வைத்திருப்பது வழக்கம் . சிறு வயதில் எமக்கு பள்ளிக்குச் செல்ல காசு எடுத்து கொடுப்பதும், கல்லூரிக்கு செல்லும் போதும்பசும்பால், எருமைப்பால் கறந்து பால் சொசைட்டுக்கு ஊற்றிவிட்டு, அதிலிருந்து வரும் பணத்தையும் சுருக்கு பையில் இருந்து தான் கொடுப்பார்கள்.
அறிவியல் வளர்ச்சியும், தொலைதொடர்பு சாதனமும் பேருந்து வசதி கூட இல்லாத எமது கிராமத்தை அடைந்த சந்தோஷத்தில் எமது அம்மாவோடு நினைத்த நேரத்தில் தொடர்பு கொண்டு பேச கைபேசி ஒன்றை வாங்கி கொடுத்தேன்.கறவை மாட்டு பால் விற்ற காசு சுருக்கு பையில் இருக்க, ரீ-சார்ஜ் செய்ய அருகிலேருக்கும் சங்ககிரி டவுனுக்கு வந்து செய்வது எமது அம்மாவின் வழக்கம். பன்னாட்டு கம்பனின் சிம் கார்டு கடந்த பத்து நாட்களுக்கு முன் நூறு ரூபாய்க்கு ரீ -சார்ஜ் செய்துள்ளார்கள்.
தினமும் ஐந்து , பத்து என பேசாமலேயே குறைவதாக என்னிடம் தொடர்பு கொண்டு சொன்னார்கள். நானும் வேறு வேலைக்காக கிராமத்திற்கு சென்ற பொது , கைபேசியை வாங்கி பார்த்தல் நூறு மெசேஜ் இருந்தது . அனைத்தும் இப்ல் கிரிக்கெட் சம்மந்தமானது.
எமது அம்மாவுக்கோ , கிரிக்கெட்டும் தெரியாது . மெசேஜ்-ஐ எப்படி கொண்டுவருவது என்பதோ ! எப்படி பார்ப்பது என்பதோ கூட தெரியாது. இந்நிலையில் எவ்வித அனுமதியும் இன்றி எமது அம்மாவின் செல்போனில் இருந்து காசு எப்படி போனது?.
இதை கேள்விப்பட்டு எமது மாமியார் அவர்களுக்கும் இதோ போல் குறைந்துவிட்டதாக கூறினார். எமது அக்கா ஒருவரும் இதேபோல் குறைவதாக கூறியுள்ளார்கள்.
எமது குடும்பத்தில் எமக்கு தெரிய முன்னூறு ரூபாய் திருடிய பன்னாட்டு கம்பெனி இது போல் எத்தனை ரூபாய் யார்?யார்?
எங்கெல்லாம் , எத்ததனை கோடிகள் நினைத்து பார்க்க முடியாத திருட்டை தடுத்து நிறுத்துவது யார்? எப்படி? எப்போது?.

Thursday, March 11, 2010

கந்து வட்டி கொடுமைக்கு காவு கொடுத்தோம் தோழரை ....


தோழர் வேலுசாமி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹர்ரம் பகுதியில் மக்களால் நன்கு அறியப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதோழர், என் நேரமும் துருதுருவென சுற்றிக்கொண்டே இருக்கும் ஓர் சமூக அக்கறையுள்ள, உண்மை தொண்டன். காணும் போதெல்லாம் எம்மிடம் எதாவது ஒரு பொது பிரச்சனை சம்மந்தமாக வழக்கு போடலாமா ? தோழர் என கேட்பார். பல குடும்ப பிரச்சனைகளை பேசித் தீர்த்து வைத்துள்ளார். எண்ணிலடங்கா பென்ஷன் தொகை வாங்கி கொடுத்துள்ளார். எப்பொழுதும் மக்களோடு கலந்து பணியாற்றக்கூடிய ஓர் மக்கள் ஊழியன் .
10.03.2010 அன்று இரவு சரியாக 12 மணிக்கு எனது கைபேசி ஒலிக்க ஏதோ வழக்குகாக அல்லது ஆலோசனைக்காக அழைக்கிறார்கள் என்ற எண்ணத்தில் ( எடுக்குலாமா? வேண்டாமா ?) என்ற இரு மனதுடன்தான் கைபேசியை அழுத்தினேன் . மறுமுனையில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் தோழர்.எஸ்.தனபால். என்ன தோழா ? இந்நேரத்திற்கு என்றேன் ?. நம்ம அக்ரஹர்ரம் வேலுவை கொலை செய்து விட்டார்கள் பாவிகள் என்றார். தூக்கம் தெறிக்க எழுந்து உட்கார்ந்தேன். என்ன ஆனது ? யார்? என்றேன். அந்த கந்து வட்டி கொடுமைக்காரர்கள் , பல முறை எச்சரித்திருக்கிறார்கள் தோழா ? இவன் இரவு 10 மணிக்கு மேல் தனியாக டிவி எஸ் -ல் செல்லும் போது வெட்டியே!!! கொன்னுட்டாங்க' என நா தழுதழுத்தது. தூக்கம் கலைந்து, அவரது முகமே முன்னால் நிழலாடியது .
சமிபத்தில் , ஒரு கணவர் மனைவிக்கு இடையே பிரச்சனை என என்னிடம் வந்தார். குழந்தையை கணவர் எடுத்து சென்று விட்டதாக கூறினார். பெண்ணிடம் பேசி திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். பிறகு பேசி முடித்து குழந்தையை பெண்ணிடம் வாங்கி கொடுத்து 1 மணி நேரத்தில் பிரச்சனையை முடித்தோம். பிறகு 3 நாட்கள் கழித்து எமக்கு கை பேசியில் அழைத்தார். தோழரே, குழந்தையை பிரிந்து கணவனால் இருக்க முடியவில்லை. எனவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள். நன்றி தோழரே! என்றார்.
இதுபோல் கடந்த பல ஆண்டுகளில் பல பிரச்சனைகளுக்காக வந்துள்ளார். மாநாடுகளிலும், ஊர்வலங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் எதாவது ஒரு பொது பிரச்சனையை பேசுவார்.
அப்படிப்பட்ட தோழரை இழந்து விட்டோம் !
தோழருக்கு செவ்வணக்கம் செய்கின்றோம். ..

Thursday, March 4, 2010

நிஜ நித்தியானந்தா

நித்தியானந்தா லீலைகள் சன் தொலைகாட்சி ஒளிபரப்பிய அடுத்த நாள் +௨ தமிழ் இரண்டாம் தாள் இறுதி தேர்வு . நம்ப பசங்க ஆர் எழுத்து நடிகை யார் என்று இலக்கிய ஆராய்ச்சியோடு தேர்வுக்கு சென்றனர் . எதை எதை எப்பொழுது விட வேண்டுமோ அதை எல்லாம் அவ்வபோது வெளிட்டு நாட்டுக்கு நன்மை செய்யும் ஊடகங்கள் வாழ்க.....
நிஜ நித்தியானந்தாவின் லீலைகளை உலகுக்கு அறிமுக படுத்தி இது வரை பார்க்காத காட்சிகளை அனைத்துகுடும்பத்திற்கும் காட்டி சேவை செய்த சன் குடும்பத்திற்கு நன்றி .இது போன்ற சேவை மீண்டும் தொடர வாழ்த்துக்கள் !?